தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு

தமிழகத்தில்  11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசு உத்தரவு
X

 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. (கோப்பு படம்)

திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:

  • திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.
  • திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.
  • மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.
  • திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.
  • சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.
  • மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.
  • சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.
  • சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story