ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ள தமிழக அரசு

மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசை தொடர்ந்து அடுத்ததாக ரேசன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறது.
தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 1.63 கோடி குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் கார் வைத்துள்ளவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த மாத சம்பளம் வாங்குவோர் என 56 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டனர்.
இதனிடையே தேர்வான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு நேரடியாக 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மேல்முறையீடு உள்பட பல்வேறு கட்டங்களாக ஜனவரி மாத நிலவரப்படி 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பு மேற்கொண்ட ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊக்கத்தொகை குறித்து சரியான தகவல்கள் இல்லை. அதேநேரம் ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்த உதவிய ரேசன் கடை பணியாளர்கள் அனைவருக்கும், குடும்ப அட்டைகளுக்கு தலா 50 பைசா என கணக்கிட்டு ஊக்கத்தொகையை பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. களப்பணியாற்றி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த உதவிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு அறிவித்தது. அதனை விடுமுறை இன்றி பணியாற்றி ரேஷன் கடை பணியாளர்கள் விநியோகம் செய்தனர். இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் வந்த போது, அப்போது பல லட்சம் பேருக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாகவே 6000 ரொக்கம் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக ரொக்கத்தொகை நிவாரணமாக வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு தற்போது ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்களையும் உற்சாகப்படுத்தும் நோக்கி வெளியிட்ட இந்த அறிவிப்பினை பணியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் தமிழக அரசு ஊக்க தொகை அறிவித்து இருப்பது பலரின் புருவத்தை உயர்த்த வைத்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu