டீசல் விலை குறைவால் புதுச்சேரிக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள்

டீசல் விலை குறைவால் புதுச்சேரிக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள்
X

புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக உள்ளதால், தமிழக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரியில் டீசல் நிரப்பிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி சாரத்தில் உள்ள கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்கில், தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் அணிவகுத்தது. இதன் காரணமாக காமராஜர் சாலையில் கடுமையான 'டிராபிக் ஜாம்' ஏற்பட்டது.

இதனை சமாளிக்க புதுச்சேரி போக்குவரத்து கிழக்கு எஸ்.பி., மாறன், தமிழக அரசு போக்குவரத்து கழக உப்பளம் டெப்போ நிர்வாகிகளை அழைத்து பேசினார். காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, தமிழக அரசு பஸ்கள், சாரம் பெட்ரோல் பங்கிற்கு வர கூடாது. இரவு 8:00 மணிக்கு பிறகு டீசல் நிரப்ப வர வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags

Next Story