பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு
பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை செய்தியாக விடுத்துள்ளது. இதுகுறித்து சில விவரங்களையும் பதிவிட்டுள்ளது.

கோடை விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடுவது வழக்கம்.. அப்படி விளையாட சென்ற 2 குழந்தைகளும் அநியாயமாக கடந்த வாரம் உயிரிழந்துவிட்டன.

கடந்த வாரம் கோவையில் சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு இதே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜீயானஸ் ரெட்டி (4) வைபோக பிரியா என்ற வியோமா (8) ஆகியோர் கடந்த மே 23ம் தேதி சாயங்காலம் விளையாட சென்றார்கள்.

அங்குள்ள சறுக்கி விளையாடும் உபகரணம் அருகே சென்றபோது திடீரென 2 பேருமே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அவர்களது பெற்றோர், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 2 பேருமே வரும் வழியிலே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். பூங்கா வளாகத்தில் உள்ள மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என்று காரணம் சொல்லப்பட்டது.. இதனால், தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் தமிழ்நாடு மின்வாரியம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன், இதுகுறித்து, மின்வாரியம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலும் தெரிவித்துள்ளதாவது: "இந்த விடுமுறை காலங்களில் 'மின் பாதுகாப்பு' பற்றி பள்ளி சிறார்களுக்கு சொல்லி தருவோம். - கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவது தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டால், மேலே மின் கம்பி, மின் கம்பம் அருகே செல்லக்கூடாது.

பூங்காக்களிலோ, பொது இடத்திலோ விளையாடும் போது, மின் கேபிள், வயர், மின் பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ தொடவோ கூடாது. - விளையாடும்போது பெரியோர் மேற்பார்வை வேண்டும். - ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம். - TANGEDCO வும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெற்றோர், ஆசிரியர், அனைவரும் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தர வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறது.

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழக மக்களின் கவனத்தை பெற்றுவருகிறது. இதனிடையே, வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.. இதுகுறித்த அறிவிப்பில், "அதன்படி வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் மற்றும்24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்த வேண்டும். துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும்" என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story