தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு: எவற்றுக்கு இ-பாஸ்களுடன் அனுமதி?

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு: எவற்றுக்கு இ-பாஸ்களுடன் அனுமதி?
X
தமிழகத்தில் தளர்வுகளுட நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் எவை இ-பாஸ்களுடன் அனுமதிக்கப்படுகிறது என்பதை காண்போம்.

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் 14ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் அறியப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றலாம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பி, ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருட்களை வாங்குமாறும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுளள்து.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!