தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மதுரை பயணம்

தமிழக முதல்வர் ஸ்டாலின்,  இன்று மதுரை பயணம்
X

Chief Minister Stalin, visit Madurai today- தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மதுரைக்கு செல்கிறார் (கோப்பு படம்)

Chief Minister Stalin, visit Madurai today- தமிழக முதல்வர் ஸ்டாலின், 3 நாள் பயணமாக, இன்று மதுரை செல்கிறார். தொடர்ந்து, பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Chief Minister Stalin, visit Madurai today- மதுரையில் பின்னணி பாடகர் பத்மஸ்ரீ டிஎம் சௌந்திரராஜன் சிலை திறப்புவிழா மற்றும் ராமநாதபுரம், மண்டபம் மீன்வர் மாநாட்டில் பங்கேற்கும் விதமாக, 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) மாலை மதுரை செல்கிறார்.

மதுரை முனிச்சாலை பகுதி தினமணி திரையரங்கு அருகில், பிரபல பின்னணி சினிமா பாடகர் டிஎம். சௌந்திரராஜனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று இரவு, 7 மணியளவில் நடக்கிறது. இச்சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் நாளை (ஆக., 17ம் தேதி) வியாழன் அன்று ராமநாதபுரத்தில் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமிலும், 18ம் தேதி மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

இதையொட்டி 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து, விமானம் மூலம் இன்று மாலை மதுரை செல்கிறார். இரவு 7 மணிக்கு முனிச்சாலை பகுதியில் பாடகர் சௌந்திரராஜன் சிலையை திறந்து வைக்கிறார். இதன்பின், மதுரை ரிங்ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். 17ம்தேதி காலையில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்பட்டுச் செல்கிறார். திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்.

இதன்பின், ராமேஸ்வரம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், தனியார் ஓட்டல் ஒன்றில் தங்குகிறார். 18ம் தேதி மண்டபத்தில் நடக்கும் மீன்வர்கள் மாநாடு, அரசின் நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மாநாடு முடிந்து மதுரை வரும் முதல்வர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதல்வரின் மதுரை வருகையையொட்டி, தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், மதுரை வருகையை ஒட்டி திமுகவினர் உற்சாகமாக காணப்படுகின்றனர். திமுகவினர் சார்பில், பல்வேறு இடங்களில் ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!