தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் நாளை (20-06-2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21-06-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளவிருந்தார். இந்நிலையில் இந்த இரு விழாக்களும் திடீரென ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பள்ளது.

இதையடுத்து சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் வேகமாக பரவியதால், தி.மு.க தொண்டர்கள், முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், உடல் நலத்தை பேணுமாறும், தமிழக மக்கள் அவரை நம்பியே இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!