தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
X

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (01.03.2022) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து தந்தை பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துதினார்.

மேலும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!