ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்: தமிழகமுதல்வர் உத்தரவு
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,அதை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரடங்கை கண்காணிப்பது, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது போன்றவற்றை அமைச்சர்களின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சென்னை தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
செங்கல்பட்டுக்கு தா.மோ.அன்பரசன்,
மதுரை மாவட்டத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி,
திருப்பூர் மாவட்டத்திற்கு மு.பபெ.சாமிநாதன்,
கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சக்கரபாணி, க.ராமச்சந்திரன்,
தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
திருச்சி மாவட்டத்திற்கு கே.என்.நேரு,
திருநெல்வேலி மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு,
ஈரோடு மாவட்டத்திற்கு முத்துசாமி,
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏ.வ.வேலு,
வேலூர் மாவட்டத்திற்கு துரைமுருகன்,
விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி,
கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு மெய்யநாதன்,
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆர்.காந்தி,
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அன்பில் மகேஷ்,
தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மனோ தங்கராஜ் என அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu