தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
X

பைல் படம்.

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வுமான உதயநிதி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உடன் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் சிலஅமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு சில இலாகாக்கள் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளன

  • கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது .
  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு.
  • சி.வி.மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது
  • அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கூடுதலாக அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை அளிக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை அளிக்கப்பட்டுள்ளது.
  • நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை