பாமக புதிய தலைவர் அன்புமணிக்கு தமிழக பாஜக தலைவர் வாழ்த்து!

பாமக புதிய தலைவர் அன்புமணிக்கு தமிழக பாஜக தலைவர் வாழ்த்து!
X

பைல் படம்.

பாட்டாளிமக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss latest நியூஸ் சென்னை திருவேற்காட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

pmk anbumani

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு தமிழக பாஜக சார்பாக என் வாழ்த்துக்கள்! அவர் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். மேலும் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!