பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
X
தமிழக பாஜக தலைவருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் அவருக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது

விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி அரசியல் மூலம் பாஜகவை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

தமிழக பாஜக தலைவருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் அவருக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான இவருக்கு மாவோயிஸ்டுகள் மற்றும் மத தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

அண்ணாமலைக்கு வந்த அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு, உளவுத்துறை (ஐபி) அறிக்கை அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரைத்தது.

உளவுத்துறை அறிக்கையை அடுத்து, தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் பயன்படுத்தப்படுவர்.

அண்ணாமலைக்கு முன்பு ஒய்-பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்கள் குழு தமிழக பாஜக தலைவருக்கு பாதுகாப்பு அளிக்கும்.

Tags

Next Story
ai based agriculture in india