எழுத்தாளர்- நெல்லை சு.முத்து பிறந்த தினம்..

Nellai Su.muthu Birthday
X

Nellai Su.muthu Birthday

Nellai Su.muthu Birthday-விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானி..

Nellai Su.muthu Birthday

தமிழ் நாட்டின் கடைக்கோடியாம் நெல்லை மாவட்டத்தில் 1951ம் ஆண்டு மே மாதம் 10 ம் தேதி எம். சுப்பிரமணிய பிள்ளை,எம். சொர்ணத்தம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார்.

ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக இருந்து வருகிறார். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.

இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்" என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004 ஆம் ஆண்டிலேயே எழுதியுள்ளார்.

இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

விண்வெளி 2057" எனும் நூல் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது."

அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு" எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது."ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது."

அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்)" எனும் நூல் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

பு.மைக்கேல்ராஜ்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?