வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
X
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார்,உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5%உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story