வணிகர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவு: விக்கிரமராஜா

வணிகர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு  ஆதரவு: விக்கிரமராஜா
X

வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா 

தேர்தல் நடத்தை விதிகளில் குறைந்தபட்சமாக பணப்பரிவர்த்தனைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வியாபாரிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை

சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மண்டல அளவிலான கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மே மாதம் ஐந்தாம் தேதி 41 வது வணிக தின மாநில மாநாடு மதுரையில் "வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு" என்ற பெயரில் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வணிகர்கள் குறைந்தபட்சமாக 2 லட்சம் ரூபாயை பண பரிவர்த்தனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவு பண்டங்களான அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் தானிய வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்களிக்க வேண்டும். வணிகம் சம்பந்தமான சட்ட உன் வடிவுகள் கொண்டு வரும்போது வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து சட்டங்கள் இயற்றிட வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற வணிக விரோத சட்டங்கள் நீக்கிட முன்மொழிவு வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் சேலம் மண்டல அளவிலான கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலின் போது தேசிய தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என வலியுறுத்தினார். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அளிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடுக்க வேண்டும். கார்ப்பரேட் சட்டதிட்டத்தில் திருத்தம் வேண்டும். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையின் போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது அப்படி பொருட்களை பறிமுதல் செய்தால் 24 மணி நேரத்திற்குள்ளாக பொருட்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த காலங்களை காட்டிலும் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிகளில் குறைந்தபட்சமாக பணப்பரிவர்த்தனைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வியாபாரிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சியினர்களுக்கும் மனுவாக அழிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் கட்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil