சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக சுனில்பாலிவால் பொறுப்பேற்றார்

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக சுனில்பாலிவால் பொறுப்பேற்றார்
X

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால் ஐஏஎஸ்

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக சுனில் பாலிவால் ஐஏஎஸ், 23.10.2021 முதல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக சுனில் பாலிவால் ஐஏஎஸ், 23.10.2021-ம் தேதி முதல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

சுனில் பாலிவால் கடந்த 1993ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். கான்பூர் ஐஐடியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பி.டெக் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும் பணியைத் தொடங்கிய சுனில்பாலிவால், நாகப்பட்டினத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றினார். திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆட்சியராகவும் அவர் பணியாற்றினார்.

தமிழக அரசின் பல துறைகளில் இவர் பல பதவிகளில் இருந்துள்ளார். தற்போது இவர் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!