சண்டே சினிமா ஸ்பெஷல் அப்டேட் முகவரி படத்தின் மூலம் இயக்குநரான வி.இசட் துரை
சண்டே சினிமா ஸ்பெஷல் அப்டேட் முகவரி படத்தின் மூலம் இயக்குநரான வி.இசட் துரை
கிட்டத்தட்ட 21 வருசத்துக்கு முன்னாடி அதாவது 2000 ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான 'முகவரி' படத்தின் மூலம் இயக்குநரானார் வி.இசட் துரை. அதற்கடுத்ததாக, தொட்டி ஜெயா, நேபாளி படங்கள் மூலம் மக்களை கவர்ந்தார். இவரது இயக்கத்தில் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் 'இருட்டு' படத்தை இயக்கியிருந்தவர் டைரக்ஷனில் இயக்குநர் அமீர் நடிப்பில் 'நாற்காலி' அப்ப்டீக்கா ஒரு படம் கடந்த ரெண்டு வருசமா பல்வேறு சிக்கல்களால் ஷூட்டிகில் இருந்து ஒருவழியா ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு இது எல்லோருக்கும் தெரியும் .
அதையே கொஞ்சம் விளக்கமா சொல்றது அப்படின்னா இந்த படத்தை 7 வருடங்களுக்கு முன்பு பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற பெயரில் இயக்கிய சந்திரன் 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விலகினார். பின்னர் தலைப்பை எம்.ஜி.ஆர் பாண்டி என்று மாற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா சில காட்சிகளையும், அமீர் சில காட்சிகளையும் இயக்கினார்.அதுக்து அப்பால இயக்குனர் வி.இசட் துரையிடம் படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். அவர் கதையில் யாரும் தலையிடக்கூடாது என்று உறுதிமொழி முதலில் பெற்றுக்கொண்டு படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைத்தார். ஏற்கனவே எடுத்த காட்சிகள் சிலவற்றை பிளாஷ்பேக்காக வைத்து கதையில் மாற்றங்கள் செய்து படப்பிடிப்பை முடிச்சாராம்.
ஆனா இப்போ வரைக்கும் படத்தின் படத்தொகுப்பும், இசைக்கோர்ப்பும் நடைபெற்று வருது -ன்னு சொல்லப்படும் நாற்காலி படத்தில் அமீர் எம் ஜி ஆர் பாண்டியன் -ங்கற பேரில எம் ஜி ஆர் ரசிகர் ஒருவர் எம் ஜி ஆர் கட்சியில் நிர்வாகி ஆகி தாதாவாகி நடக்கும் க்ரைம் களேபரமே ஸ்டோரியாம் அது வேற விஷயம் அப்படின்னாலும் இந்தப் படத்துலே ஓ பி எஸ் தொடங்கி ஆறேழு மெயின் கேரக்டர்களை காமெடியன்களா ஆக்கி அதை ஈ பி எஸ்-கிட்டே சொல்லி சிரிக்க வச்சி அவரை வச்சி நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" என்ற எம்.ஜி.ஆரின் முதல் தனிப்பாடல் ஒலி குறுந்தகட்டினை வெளியிட முன்னாள்செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொள்ள ஏற்பாடு செஞ்சு அதைக் காட்டி கொஞ்சம் வாங்கிய ஃபைனான்சோட அமீர் அப்ஸ்காண்ட் ஆயிட்டாராம்..
இப்ப படத்தை பக்காவாக முடிக்க வேண்டிய துரை விழி பிதுங்கி இருக்கும் சூழலில் அமீர் தன் இஷடத்துக்கு எடிட்டிங் எல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கறதா சொல்லி சிலரிடம் ஃபைனான்ஸ் கேக்கறாராம்
ஆனா தற்போது திமுக ஆட்சி வந்துட்டதால இக்காலக்கட்டத்தில் எம் ஜி ஆர் நாற்காலி-கெல்லாம் மவுசு கிடையாது -ன்னு ஓப்பனா சொல்லி பலரும் கை விரிச்சுப்புட்டதா நம்ம காதுக்கு சேதி அனுப்பி இருக்காய்ங்க .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu