மூத்த பத்திரிக்கையாளரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் காலமானார்

மூத்த பத்திரிக்கையாளரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் காலமானார்
X

சுப்புலட்சுமி அம்மையார் ( வயது 82 )

மூத்த பத்திரிகையாளர் மாதவன், இன்ஸ்டா நியூஸ் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருபவர். இவரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் நேற்று நண்பகல் காலமானார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூரைச் சேர்ந்த தெய்வத்திரு கந்தசாமி ரெட்டியாரின் மனைவி சுப்புலட்சுமி, வயது 82. வயது முதிர்வின் காரணமாக நேற்று நண்பகல் இயற்கை எய்தினார். மூத்த பத்திரிக்கையாளரும் இன்ஸ்டா நியூஸ் முதன்மை ஆசிரியருமான மாதவன் இவரின் மகன் ஆவார். இன்று பிற்பகல் அன்னாரின் இறுதிச்சடங்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரத்தில் நடைபெற உள்ளது. சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாநியூஸ் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர், நிர்வாகத்தினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!