துபாய் சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகள் : அமைச்சர் கயல்விழி வாழ்த்து
தேர்வாகிய மாணவ மாணவிகளுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் சோ.மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்ட இணையவழி வினாடி வினாவில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் துறையின் சார்பில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள துபாய் நகரத்திற்கு சுற்றுலா அழைத்து செல்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் என்ணை கிராமம், திருவள்ளூர் மாவட்டம் வடகரை மற்றும் மதுரை மாவட்டம் சங்கரலிங்காபுரம் ஆகிய ஊர்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பயின்று வரும் 4 மாணவ/மாணவிகள் இதற்கு தேர்வாகியுள்ளனர்.
அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமைச் செயலகத்தில் நேற்று நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் சோ.மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu