இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 74.38 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.13%. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,74,269 ஆகும். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.54%.
கடந்த 24 மணி நேரத்தில் 37,687 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,24,47,032 பேர் குணமடைந்துள்ளனர். வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.11%) 80 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் (2.26%) 14 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.30 கோடியாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu