வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிதி: முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட மன்ற பேரவை விதிகளுள் விதி எண். 110-இன் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
"வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்"
மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கி அரசு ஆணை (நிலை) எண். 94, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (கொடுத்தடுத்துற நாள்.24.11.2021-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதி 1995, (திருத்த விதிகள் 2016) விதி 12(4)-இன் பிற்சேர்க்கை - இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வழக்கின் தன்மைகேற்றவாறு மாநில அரசின் நிதியின் மூலம் உயர்த்தி வழங்கப்படும் கருணைத் தொகை குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu