தஞ்சாவூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் மருத்துவர் த.ராசலிங்கம் தலைமையில் .மாநில பொதுச் செயலாளர் தஞ்சை முனைவர் பாஸ்கரன், பொருளாளர் திருச்சி கே.சி நீலமேகம், மாநிலத் துணை தலைவர் பெம்பலூர் முனைவர் பெரியசாமி, மதுரை வக்கில் அசோகன், துணை செயலாளர் திருச்சி ஆர்.இளங்கோ, கரூர் சுகுமார் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பேராசிரியர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார்.
பொதுக்குழுவில் சிறப்பாக சேவை செய்யும் பண்பாளர்களுக்கு தஞ்சை "யோகம்" இரா.செழியனுக்கு திருவள்ளுவர் விருது,
குடந்தை மினர்வா மேல்நிலைப் பள்ளி தாளாளர் முனைவர் மேகநாதனுக்கு எம்.எஸ்.உதயமூர்த்தி விருது
மக்கள் சக்தி இயக்க பண்பாளர் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கந்தசாமிக்கு பேரா.சண்முகம் விருதும் வழங்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க சார்பில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்திலிருந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க மாநில பொதுசெயலாளர் தஞ்சை முனைவர் பாஸ்கரன் மாநில பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் வாசித்தார் .
தீர்மானங்கள்
1.தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற இலக்கை எட்டவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கையை அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்துகிறது.
2.அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகம் அமைத்து, நூலகர் நியமிக்க வேண்டும், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத குறையைப் போக்க வேண்டும், நீதிபோதனை வகுப்புகள் சமயச் சார்பின்றி அறம் சார்ந்ததாக நடத்தப்பட வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
3.தமிழ்நாட்டில் நீர்வளத்தைப் பெருக்குவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் பாசனக் கால்வாய், உபரிநீர் கால்வாய், புதிய ஏரிகள், தடுப்பணைகள் உருவாக்குதல் போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நீர்மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
4.மேட்டூரிலிருந்து பெரம்பலூர் வரையிலான உபரிநீர் கால்வாய் திட்டம், முசிறி காவிரி ஆற்றிலிருந்து பெரம்பலூர் வரையிலான உபரிநீர் கால்வாய் திட்டம் உடனே தொடங்க அரசு முன்வர வேண்டும்.
5.தஞ்சாவூரிலிருந்து அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், சேலம் வழியாக பெங்களூரு செல்லும் வகையில் புதிய இருப்புப்பாதை வழித்தடத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார், கரூர் மாவட்ட செயலாளர் முத்து சதானந்தம், மதுரை மாவட்ட செயலாளர் சேகர், கோவை வெ.ரா.சந்திரசேகர், திருச்சி குமரன், சந்துரு சிவகங்கை முத்தமிழ் அரசன், தல்லாகுளம் முருகன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கந்தசாமி அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
முடிவில் தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu