அறிவுத்திறனை விசாலமாக்கும் அஞ்சல் தலை சேகரிக்கும் பொழுது போக்கு பழக்கம்

திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அஞ்சல் தலை சேகரிப்பு பொழுது போக்கு பழக்கம் நமது அறிவுத்திறனை விசாலமாக்குகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு பொழுதுபோக்குகளின் அரசன் என்ற சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் அஞ்சல் தலை சேகரிப்பு பொழுதுபோக்கின் அரசன் என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
அஞ்சல் தலை சேகரிப்பை 'பொழுதுபோக்குகளின் அரசன்' என்பர். அவ்வளவு சுவாரசியம் தபால் தலை சேகரிப்பில் இருக்கிறது. மாணவர்கள் தபால் தலை சேகரிப்பில் ஈடுபடுவது அவர்களின் அறிவுத் திறனை விசாலமாக்கும்.அஞ்சல் தலை சேகரிப்பில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறை மாவட்ட அஞ்சலகங்களில் உள்ள ஃபிலாட்டலிக் சேகரிப்பு மையத்தில் முன்பணம் செலுத்தினால் இந்திய அஞ்சல் துறை வெளியிடும் அஞ்சல் தலையினை இல்ல முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்புவார்கள்.
அஞ்சல் தலை சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் பறவைகள், விலங்குகள், தேச தலைவர்கள் என ஏதேனும் ஒரு கருப்பொருளில் சேகரிப்பில் ஈடுபடலாம்.இந்தத் தபால் தலை சேமிப்பு அறிவுத்தேடலை உருவாக்கும். ஒவ்வொரு தபால் தலையின் பின்னாலும் ஏதோ ஒரு வரலாற்றுத் தருணம் ஒளிந்திருக்கும். மாணவர்கள் அதுகுறித்த தேடலை உருவாக்கி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி மாவட்ட தபால் தலை சேகரிப்போர் சங்க பொருளாளர் தாமோதரன், இணைப்பொருளாளர் மகாராஜா, சுரேஷ், சசிகலா, லக்க்ஷனா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்க, இணைச் செயலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu