"பள்ளிக்குச் செல்லலாம், கவலைப்பட வேண்டாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளிக்குச் செல்லலாம், கவலைப்பட வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

பள்ளிகளைத் திறக்க கடிதம் எழுதிய மாணவி, தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன்- உதயகுமாரி ஆகியோரின் மகள் செல்வி பிரஜ்னா பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்புகொண்டு பேசினார்.

நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும் போது, பள்ளிக்குச் செல்லலாம்-கவலைப்பட வேண்டாம் என்று அந்த மாணவியிடம் கூறினார். மேலும், ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம்அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வாழ்த்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்