ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நிகழ்ச்சிகள் முழு விவரம்
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா டிசம்பர் 22ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறு நாளான 23ந்தேதி பகல் பத்து முதல் திருநாள் தொடங்குகிறது. பகல் பத்து திருவிழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்தின் ஒன்பதாம் நாள் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதிக்கிறார். இராப்பத்து விழாவின் முதல் நாளான ஜனவரி 2ம் தேதி அதிகாலை நம்பெருமாள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறார். வைகுந்த ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து இராப்பத்து உற்சவம் ஜனவரி 11ந்தேதி வரை நடைபெறும். 12ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறும்.
உற்சவ காலங்களில் நம்பெருமாள் எழுந்தருளல், பொதுஜனசேவை உள்ளிட்ட விழா முழு விவரத்தையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டு உள்ளார்.
நிகழ்ச்சி நிரல் விவரத்தை இனி பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu