ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி: ஒரு பார்வை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி: ஒரு பார்வை
X
காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

2008 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

முன்பு தனித் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் - மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் அடங்கியுள்ளன. நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டடது. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

கார் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள தொகுதி இது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால் தொழிலாளர்கள், பணியாளர்கள் நிறைந்த தொகுதியாக உள்ளது.

தேர்தல் வரலாறு

1967 சிவசங்கரன் (திமுக)

1971 டி.எஸ். லட்சுமணன் (திமுக)

1977 சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக)

1980 நாகரத்தினம் (திமுக)

1984 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)

1989 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)

1991 மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)

1996 நாகரத்தினம் (திமுக)

1998 டாக்டர் வேணுகோபால் (அதிமுக)

1999 அ. கிருட்டிணசாமி (திமுக)

2004 அ. கிருட்டிணசாமி (திமுக)

2009 த. ரா. பாலு (திமுக)

2014 க. நா. இராமச்சந்திரன் (அதிமுக)

2019 த. ரா. பாலு (திமுக)

தொகுதியின் முக்கிய பிரச்னைகள்

இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் இன்னும் நிறைவடையவில்லை. சென்னை புறநகர் பகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் தொகுதியை மையப்படுத்தி பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்பது நீண்ட காலக் கோரிக்கையாக இன்னும் தொடர்கிறது. அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!