சபரிமலை செல்ல சென்னை-கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள்
சபரிமலைக்கு சிறப்பு ரயில்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17ம் தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடக்கிறது.
மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27ம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இந்த ரயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu