/* */

தமிழ் புத்தாண்டு விடுமுறை நெல்லையிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து பெங்களூர் பனஸ்வாடி ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டு விடுமுறை நெல்லையிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்
X

திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில்தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து பெங்களூர் பனஸ்வாடி ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கு தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி பெங்களூரு பனஸ்வாடி - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (07385) ஏப்ரல் 13 புதன் கிழமை அன்று பனஸ்வாடியிலிருந்து இரவு 08.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - பனஸ்வாடி அதிவிரைவு சிறப்பு ரயில் (07386) திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல் 16 சனிக்கிழமை அன்று இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு பனஸ்வாடி சென்று சேரும்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

பாண்டியன், வைகை, பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றங்கள்

சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 14 முதல் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.00, 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 05.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 03.10, 05.15, 05.35, 05.42, 5.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 03.05, 05.10, 05.30, 05.37, 05.53, காலை 06.07, 06.30, 06.43, 07.00, 07.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 08.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.10 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.30 மணிக்கு புறப்படும்.

மதுரை - பழனி விரைவு சிறப்பு ரயில் (06480) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.30, 07.38, 07.48 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.35, 07.44, 07.52 மணிக்கு புறப்படும்.

Updated On: 13 April 2022 12:42 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...