/* */

31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே இடையே சிறப்பு ரெயில்

மார்ச் 31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என திருவனந்தபுரம் கோட்டம் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

HIGHLIGHTS

31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே இடையே சிறப்பு ரெயில்
X

திருவனந்தபுரம் கோட்டம் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே ரெயில் (எண்: 16382) இயக்கப்படுகிறது. தினசரி காலை 8.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே சென்றடையும். மறு மார்க்கமாக புனேயில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி முதல், தினசரி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16381) 3-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

இந்த ரெயில்களுக்கு இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் சந்திப்பு, சிரையின்கீழ், கடைக்காவூர், வர்க்கலை சிவகிரி, பரவூர், கொல்லம், கருணாகப்பள்ளி, காயங்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுண், ஆலுவா, அங்கமாலி, சாலக்குடி, இரிஞ்ஞாலக்குடா, திருச்சூர், வடக்காஞ்சேரி. ஒற்றப்பாலம், பாலக்காடு சந்திப்பு, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, ஜோலார்பேட்டை, காட்பாடி, பகாலா சந்திப்பு, திருப்பதி, ரேணுகுண்டா, கொடுரு, கடப்பா, ஏருகுண்டலா, தடிப்பற்றி, கூட்டி, குண்டக்கல் சந்திப்பு, அதோனி, மந்திராலயம் ரோடு, ரெய்சூர், யாட்கிர், கலாபுராகி, சோலாப்பூர் சந்திப்பு, குருதுவாடி மற்றும் டாண்ட் சந்திப்பு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் 2வது வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 5 ஏ.சி பெட்டிகள், முன்பதிவில்லா இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்பட 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

Updated On: 24 March 2022 1:57 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!