நீட் விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது

நீட் விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது
X

கோப்புப்படம்

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கூறி இந்த மசோதாவை கவர்னர் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில், மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டுகளில் 5-ஆவது முறையாக இன்று சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 2011 டிசம்பர் 15-ல் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2017-ல் ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், 2018-ல் மேகதாது அணை விவகாரத்துக்காகவும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil