தமிழக எல்லைகளில் சிறப்பு காவல்படை: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அமைச்சர் நடவடிக்கை

தமிழக எல்லைகளில் சிறப்பு காவல்படை: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அமைச்சர் நடவடிக்கை
X

உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழக எல்லையோரப் பகுதிகளில் சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழக எல்லையோரப் பகுதிகளில் சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

இதுகுறித்து துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

கடந்த மே 23-ம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்தில் இருந்து பொது விநியோகத் திட்ட அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாகவும், அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் வெளிச்சந்தையில் விற்பனைக்கு செல்கிறது. இதுதவிர, கர்நாடக மாநிலத்தில் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், அவை கடத்தப்படும் தடங்களையும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்ட வாகன உரிமையாளர் மே.24-ம் தேதியே கைது செய்யப்பட்டுவிட்டார். அவரிடம் இருந்து 1,200 கிலோ அரிசியும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் எல்லையோர மாவட்டங்களில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால், 2019-20-ல் 514 வழக்குகள் பதியப்பட்டு, 366 பேரும், 2020-21-ல் 544 வழக்குகள் பதியப்பட்டு 538 பேரும், 2021-22 ல் ஏப்ரல் வரை 937 வழக்குகள் பதியப்பட்டு 836 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெரியும்.

கடந்த ஆட்சியின் 2 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகளை, இந்த ஆட்சி ஓராண்டில் எடுத்துள்ளது. ஆந்திர முதல்வர் சுட்டிக்காட்டியுள்ள சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் மட்டுமின்றி திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் வழித்தடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வீடியோ கேமரா மூலம் வாகன நகர்வு கண்காணிக்கப்படுகிறது, என அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil