உங்கள் பெயர், எந்த வார்டு, எந்த வாக்குச் சாவடியில் உள்ளது : தெரிந்து கொள்ள சிறப்பு வசதி
பைல் படம்
இது தொடர்பாக, தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணை யம் வெளியிட்ட அறிவிப்பு கூறியிருப்பதாவது :
இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ள 1.11.2021 அன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்க ணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாககொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், 2021தயாரிக்கப்பட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் வெளியிட மாவட்டதேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுவாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வார்டுவாரியான வாக்காளர் பட்டியல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான 'tnsec.tn.nic.in'ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.
மேலும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்கவேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu