வரும் 12-ம் தேதி பிஎப் சந்தாரர்களுக்கான "உங்கள் அருகில் உங்கள் நிதி" சிறப்பு முகாம்

EPFO News Tamil
X

EPFO News Tamil

சென்னையில் வரும் 12-ம் தேதி பிஎப் சந்தாரர்களுக்கான “உங்கள் அருகில் உங்கள் நிதி” சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் வரும் 12-ம் தேதி பிஎப் சந்தாரர்களுக்கான "உங்கள் அருகில் உங்கள் நிதி" சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், சென்னை வடக்கு மண்டல அலுவலகம், தொழிலாளர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, "உங்கள் அருகில் உங்கள் நிதி" முகாமை, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் செப்டம்பர் 12ம் தேதி நடத்துகிறது.

வருங்கால வைப்பு நிதிக் கணக்கு எண்ணை வைத்துள்ள சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வுகாண, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா