தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும்,பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி,இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி,இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 300 கூடுதல் சிறப்பு பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். 04.10.2024,05.10.2024 வெள்ளி, சனி ஆகிய இருநாட்களுக்கும் சேர்த்துமொத்தம் 475சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 06.10.2024,07.10.2024,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
05.10.2024, 06.10.2024 ஆகிய நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவுசேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.inஇணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப்TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ளலாம்.
கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமமும் இன்றி பயணிக்க “மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள்,பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu