தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை -சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை -சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையினை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 13, 14ம் தேதிகளில், சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

தமிழகத்தில் இந்த வாரம் தொடர்ந்து விடுமுறை வாரமாக காணப்படுகிறது. ஏனென்றால் நாளை தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகமெங்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும் வர உள்ளதால் அன்றைய தினமும் தமிழகத்தில் தொடர் விடுமுறையாக காணப்படுகிறது. அதன் பின்னரே ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

இதனால் இந்த நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அவர்களுக்கு பயனுள்ள வகையில் கிட்டத்தட்ட 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில் தமிழகமெங்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.


திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூருக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறினார். சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக ஏப்ரல் 17-ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்