தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் தமிழகம் முழுவதும் 1970 சிறப்பு பேருந்துகள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் 1970 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வருகிற 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் பயணம் செய்ய வருகிற 17 மற்றும் 18 ம் தேதிகளில் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ,மன்னார்குடி ,நன்னிலம் ,நாகப்பட்டினம் ,காரைக்கால், வேளாங்கண்ணி ,மயிலாடுதுறை ,திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி ,அரியலூர் ,ஜெயங்கொண்டம் ,கரூர் ,புதுக்கோட்டை, காரைக்குடி இராமநாதபுரம் ,மதுரை ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது .
திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ,மதுரை ஆகிய இடங்களுக்கும் மேலும் மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி ,தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து நகர்களுக்கும் பயணிகள் தேவைக்கேற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி ,கோவை ,திருப்பூர் ,மதுரை ,தஞ்சை ,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,காரைக்குடி வழித்தடங்களில் வருகிற 17 மற்றும்18 ஆம் தேதியில் 1970 சிறப்பு பஸ்களும் 20ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி 1980 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையங்களில் இரவு பகலாக சேவை மையங்கள் செயல்படும். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் பஸ் இயக்கம் குறித்து தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்படும். போக்குவரத்து கழகங்கள் பயணிகளின் தேவையை கணித்து அதற்கு ஏற்ப பஸ் தேவையை அளிக்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் டிஎன்எஸ்சிடிசி என்ற செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் பரிசோதர்கள் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பஸ்களின் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மேலாண்மை இயக்குனர் மகேந்திர குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu