Special Buses- சென்னையில் இருந்து 8 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்; இதுவரை 4.80 லட்சம் பேர் பயணம்
பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கம் (கோப்பு படம்)
Special Buses, 4.80 Lakh Passengers Travel- தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் இன்று (திங்கள்) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகின்றன. முன்னதாக, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டதால், பெரும்பாலானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
பயணிகளின் வசதிக்காக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையிலிருந்து, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுகள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி நெடுஞ்சாலை பஸ் ஸ்டாண்டுகள் மூலம் தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், கூடுதலாக 2,265 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், அக். 20, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட சிறப்புப் பஸ்களில் 3 லட்சத்து 92 போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று இரவு 12 மணிவரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 8,003 பஸ்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu