எதிர் கட்சிகளை அலற விடும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறைகளிலும் சிறந்த வல்லுனர். அவரின் வழிகாட்டுதலின் படி நிதி அமைச்சர் பிடிஆர் பழிவேல் தியாகராஜன் செயல்பட்டு எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார்.
தமிழக நிதி நிலைக்குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்கிற பெயரைப் பெற்றார். இதனை தைரியமாக செய் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி காட்டினார். அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்து எதிர் கட்சிகளின் வேசங்களை கலைத்தார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
கடந்த 2013 - 14ஆம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தின் நிதிநிலைமை மோசமடையத் தொடங்கியது. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம் கடந்த 2017-18, 2018 -19ம் ஆண்டுகளில் உபரி வருவாய் எட்டிய நிலையில் தமிழகம் மட்டும் தொடர்ந்து வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்து வந்துள்ளது. கடந்த 2019 - 20ம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறையின் அளவு ரூ.35,909 கோடி. 2020-21 ஆம் ஆண்டு 61,320 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை.
வெளிச்சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி சாலைகள், பாலங்கள், கட்டங்கள் அமைத்தல் போன்ற மூலதனச் செலவுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அந்த நிலை மாறி, கடன் பெற்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலை வந்தது. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் கடன்பத்திரம் மூலம் திரட்டிய நிதியை வைத்து ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தமிழ்நாட்டின் நிதிநிலைமை சென்றுவிட்டது.
தமிழ்நாட்டு அரசின் மொத்த பொதுக்கடன் 31.3.2021 அன்று ரூ.5,70,189 கோடி. கடந்த பத்தாண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2006 - 07ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.48 சதவீதமாக இருந்த சொந்த வரி வருவாய் வரவினங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து, சென்ற 2020- 21ஆம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதமாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத சரிவு என்பது தற்போதைய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பைக் குறிக்கிறது.
கடந்த 2018-19ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழ்நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த வரி வருவாயின் விகிதம் தேசிய சராசரி அளவை விடக் குறைந்தது.
தமிழ்நாட்டின் வாகன வரி வருவாய் கர்நாடகம், கேரள மாநிலங்களை விடக் குறைவு. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வருவாய் குறைந்துள்ளது மட்டுமின்றி, வருவாய் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
மத்திய அரசு நியமித்த நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உருவாக்கிய விதிமுறைகள் காரணமாக, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய ரூபாய் 2577.29 கோடி கிடைக்கவில்லை. அதை வாதாடிப் பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை.
2020-21 ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளின் மூலம் ஒன்றிய அரசு 3,89,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. ஆனால் வெறும் 837 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்கள் 5.4 சதவீதம் குறைந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் நடக்காத காரணத்தினால் மத்திய அரசின் மானியங்களை முழுமையாகப் பெற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் மிகவும் பாதிப்படைந்தது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்வாரியத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2 லட்சம் கோடி. சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களின் மொத்தக் கடன் ரூ.5,282 கோடி.
முறையற்ற நிர்வாகத்தினாலும், மோசமான நிதி மேலாண்மையினாலும், போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 59 ரூபாய் இழ்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் தினசரி இழப்பு 15 கோடி ரூபாய்.
மின்வாரியம் கடந்த பத்தாண்டுகளாக மின்சாரத்தை அதிக விலையில் வாங்குவதும், சொந்த உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அதிகரிக்காததாலும், மின்வாரியத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தினசரி இயக்க இழப்பு 55 கோடி ரூபாய் ஆகும்.
மின்வாரியம் கடந்த பத்தாண்டுகளாக மின்சாரத்தை அதிக விலையில் வாங்குவதும், சொந்த உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அதிகரிக்காததாலும், மின்வாரியத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தினசரி இயக்க இழப்பு 55 கோடி ரூபாய் ஆகும்.
தமிழகம் பெற்றுள்ள கடனுக்காக தினசரி செலுத்தும் வட்டித் தொகை - ரூ.115 கோடி. பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டித் தொகை - 180 கோடி ரூபாய். ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டுக்கு செலுத்தும் வட்டித் தொகை (பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட) - 7,700 ரூபாய். ஒவ்வொரு குடிமகனுக்கான மொத்தக் கடன் ரூ.1,10,000 ஆகும். இவ்வாறு உண்மையை உலகு எடுத்துக் காட்டினார்.
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி பேசி அசத்தினார். தமிழகம் பெற வேண்டிய நிதியை பெறுவதில் அவர் மத்திய அரசிடம் காட்டிய விவேகமான பேச்சு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.
''கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு சில மாதங்களாவது சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு தரவேண்டும் என கோரியிருக்கிறோம். தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு விலக்கு தரமுடியாமல், அந்த வரியை வசூலித்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் ஓர் அரசு இருந்தால், அந்த அரசு திறமையான நிர்வாகமற்ற அரசு என்றுதான் கூற வேண்டும்.
ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று தெரிவித்தோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு என சுட்டிக்காட்டினோம். மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தோம்
''நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநில அரசுகளின்றி ஒன்றிய அரசு இல்லை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினோம்
ஜிஎஸ்டி கூட்டத்தில் பெரிய மாநிலங்களில் இருந்து பங்கேற்பவர்கள் பேசுவதற்கு அதிக நேரம் தரவேண்டும் எனவும், கூட்டத்தில் பேசும் விவரங்களை மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் அனைவரும் அறிந்து கொள்ளும்படியான வசதிகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
'வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாநிலத்துக்கு வாக்குகள் இருக்க வேண்டும்; தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.
மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு திருப்பித் தரும் நிதி தமிழகத்திற்கு 30 சதவீதம் அளவுக்கே உள்ளது. ஜிஎஸ்டி வரி முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. அது முழு ஆய்வு இல்லாமல் கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டு வந்தால்தான் அது நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது,'' என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றிய தனது கருத்துகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இவ்வாறான இவரது பணி அனைத்து தரப்ப்பினரையும் கவர்ந்தது.
தனது சொந்த மாவட்டத்தில் நடந்த ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதிலும் திறமை மிக்கர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். குறிப்பாக மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செய்த குளறுபடிகளை வெளியே கொண்டுவதார். முன்னாள் அமைச்சர்களின் ஸ்மார்ட்சிட்டி திட்ட லீலைகளை பற்றி அவர் கூறியதாவது.
மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவும் அவசர அவசரமாக ஊழல் செய்யவும் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது "சட்டப்படி நடைபெற வேண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம் தற்போது நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி கூட்டம்கூட நடத்தப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எல்லாம் தவறாகவே ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டத்தைச் செயல்படுத்த தனித் தலைவரை நியமித்திருக்க வேண்டும். எம்எல்ஏக்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் அக்கட்சி எம்எல்ஏக்களைக் கூட அழைத்து ஆலோசனை கேட்கவில்லை.
மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவும் அவசர அவசரமாக ஊழல் செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்துறையில், எப்படிக் கூடுதலாக ஊழல் செய்யலாம் என்ற அடிப்படையில்தான் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமே தொடங்கப்பட்டிருக்கிறது.
அதற்குச் சிறந்த உதாரணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் பேவர் பிளக். ஆற்று மணலைத் திருடி கொண்டு வந்து, எங்குமே கிடைக்காதது போல கற்களைக் கொண்டு சாலை அமைத்துள்ளனர். சாலைகளை வீணாக்கியும் ஊழலுக்காகவுமே இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். தேவைக்கும் ஜனநாயகத்துக்கும் முரணாகவே இத்திட்டம் மதுரையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது." என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை உலகறிய செய்தார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்கட்சியினரின் தவறான பதிவுகள், தவறான பேச்சுகளுக்கு காட்டமாகவும், ஆவேசமாக பதில் கூறி வாயடைய வைப்பதில் வல்லவர். அதற்கு ஒரு உதாரணம்
பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா? என ஆவேசமாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு பதிவை வெளியிட்டார்.
'' எனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி.எஸ்.டி.கூட்டத்திற்கு செல்லவில்லை என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக கூறிய போஸ்டை, பிரபல செய்தி வாசிப்பாளர் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ''வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா?'' என விளக்கமளித்துள்ளார். அவதூறுகளுக்கு ஆவேசமாகவும் கூட பதில் அளிக்க கூடியவர்.
திமுக தலைமை வழிகாட்டுதலின் படி செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பெற்று வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu