சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி
தெற்கு ரயில்வேயில் எழும்பூர் ரயில் நிலையம், பழமையான கட்டடங்களில் ஒன்றாகவும், இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகவும் உள்ளது. 144 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தின் பழமை மாறாமல், பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது.
ரயில்வே மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 734.91 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது
இதையடுத்து, மண் பரிசோதனை, நிலப்பரப்பு கணக்கெடுப்பு, பார்சல் அலுவலகம், நடைமேம்பாலங்கள், காத்திருப்பு அறைகள் உள்ளிட்டவை அமையவுள்ள நிலப்பரப்பு தேர்வு உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அடுத்த 36 மாதங்களில், இந்த ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணியை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு காந்தி இர்வின் சாலையிலும், பின்புறப் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் முடிவடைகிறது. இந்த இரு பகுதியிலும் ரயில்வே விரிவாக்க மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டடம் புதிதாக அமைய இருக்கிறது.
பயணியர் வருகை, புறப்பாடு ஆகியவைக்கு தனித் தனியாக அரங்குகள், பார்சல்களை கையாள தனிப்பகுதி, நடை மேம்பாலங்கள், 'லிப்ட், எஸ்கலேட்டர்'கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பயணியரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள், குடிநீர் வசதி, கார்கள் வாடகை கார்கள், இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோ ரிக் ஷாக்கள் ஆகியவை நிறுத்தும் வகையில், 'மல்டி லெவல் பார்க்கிங்' உள்ளிட்ட வசதிகளுடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.
விமான நிலையத்தில் இருப்பதுபோல பயணிகள் வருகை, புறப்பாடு மற்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் பார்க்கின் வசதிகள் இங்கு செய்யப்பட உள்ளன. இதற்காக ஹைதராபாத் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு 36 மாதத்திற்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடியில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் மாதிரி படங்களை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu