எழும்பூர் திருநெல்வேலி இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

எழும்பூர்  திருநெல்வேலி இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
X

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம் 

வழக்கமான கட்டணமே சிறப்பு ரயிலுக்கு நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வந்தது.

அந்தவகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை (9ம் தேதி) காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) இரவு 11.15 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
வயதுக்கு ஏற்ற உப்பு அளவு தெரியுமா? உடலுக்கு முக்கிய அறிவுரை!..