திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்

திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்ற நடிகர் சின்னிஜெயந்த் மகன்
X

நடிகர் சின்னிஜெயந்த் மகன், திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்றார்.

Tirupur Collector -திருப்பூர் புதிய சப் கலெக்டராக நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேற்று பொறுப்பேற்றார்.

Tirupur Collector - திருப்பூர் சப் கலெக்டராக இருந்த பண்டரிநாதன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக டெல்லியில் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி செயலாளராக பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் (வயது 29) திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன். திருப்பூர் சப் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேற்று காலை சப் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கலெக்டர் வினீத்திடம் வாழ்த்து பெற்றார். சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனை சந்தித்த துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் சப்-கலெக்டராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. திருப்பூர் மக்களின் நலனுக்கும், மேம்பாட்டுக்காகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து சிறந்த முறையில்,எனது உழைப்பை தருவேன். திரைத்துறை குடும்பத்தை சேர்ந்தவன் என்றாலும், எனது பெற்றோர் எனது சிறு வயதில் இருந்தே என் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எனது ஆசிரியர்களின் வழிகாட்டுதல், அறிவுரையால் இந்த நிலையை எட்ட முடிந்தது. அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர், நண்பர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஐ.டி. துறையில் பணியாற்றியவர். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கடந்த 2020-ம் ஆண்டு அகில இந்திய அளவில் 75-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

குவிகிறது பாராட்டு

வழக்கமாக சினிமா துறை சார்ந்தவர்களின் வாரிசுகள், சினிமா துறையில் நடிப்பு, டைரக்சன் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவர். குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம், புகழ் பெற சிறந்த வாய்ப்பாக, சினிமாத்துறை இருப்பது இதற்கு முக்கிய காரணம். சினிமா துறை மட்டுமின்றி, அரசியல் சார்ந்தவர்களின் வாரிசுகளும் பெரும்பாலும் அரசியலிலேயே தங்களது வாரிசுகளை ஈடுபட செய்வதுதான் வழக்கம். சினிமா, அரசியல் துறைகளில், வாரிசுகளின் வருகை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதே போல், தங்கள் துறைகளுக்கே தங்களது வாரிசுகளும் வரும் வகையில், அவர்களை சிறு வயதில் இருந்தே அதற்கு தயார்படுத்தி விடுகின்றனர்.


ஆனால், தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக, காமெடி நடிகராக வலம்வருபவர் சின்னி ஜெயந்த். அவரது மகன், சினிமாத்துறையில் ஈடுபாடு காட்டாமல், நடிப்பு, டைரக்சன் என ஆர்வம் காட்டாமல், சிறு வயதில் இருந்தே கல்வியில் தீவிரமாக இருந்துள்ளார். படிப்பில் தீவிர கவனம் செலுத்தி, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, சப் கலெக்டராக அரசுத்துறை அதிகாரியாக திருப்பூரில் பதவி ஏற்றிருப்பது, பலரது பாராட்டை பெற்றுள்ளது. இந்த தகவலை பலரும், சமூக வலைதளங்களில் பரவ விட்டு, சின்னிஜெயந்த் மற்றும் அவரது மகன் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனை பாராட்டி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil