இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; மறந்தும் கூட இவற்றை செய்யாதீர்கள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; மறந்தும் கூட இவற்றை செய்யாதீர்கள்
இந்த ஆண்டில் (2022) முதல் சூரிய கிரகணம் வரும் 30-ந்தேதி நிகழ்கிறது. பகுதி சூரிய கிரகணமான இதை இந்தியாவில் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கிரகணங்களுக்காக வானியலாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம்.
சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
4. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
5. கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை
1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
3. சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu