சிங்கம்புணரி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

சிங்கம்புணரி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
X

சிங்கம்புணரி அருகே காளாப்பூர் ஊராட்சியில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்திய போலீசார்.  

சிங்கம்புணரி அருகே , குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே காளாப்பூர் ஊராட்சியில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலைக்காக பாலம் கட்டும் பணி நடந்தது. அப்போது, குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டு, இன்றுவரை சரி செய்யப்படவில்லை. அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகம் சார்பில், குழாய் இணைப்பை சரிசெய்ய அனைத்து பொருட்களையும் வாங்கி தயார் நிலையில் வைத்திருந்தால் கூட, அதற்கான ஏற்பாடுகளை செய்து தர, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் இரண்டு மாதங்களாக குடிநீர் கிடைக்காமல், பல மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர்.

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காலி குடங்களை வைத்து பெண்கள் இன்று சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர் .இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!