வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல்
X

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வருவாய் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சிந்து தலைமையில் சட்டமன்றத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது .முன்னதாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் உள்ள மொத்தம் 410 மையங்களுக்கு தேவையான 492 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவாய் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் முழுமையாக வைக்கப்பட்டு காவல்துறை முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் மின்னணு இயந்திரம் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் வட்டாட்சியர் ஜெயந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், தேர்தல் பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!