திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை: மீன்பிடிக்கும் கிராம மக்கள்

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை: மீன்பிடிக்கும் கிராம மக்கள்
X

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர்  அருகே பெய்த மழை நீர் செல்லும் கால்வாயில் மீன் பிடித்து மகிழும் இளைஞர்கள்

மழைநீர் வரத்து கால்வாய்களில் உயிருடன் மீன்களை பிடிப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக ஓடும் வாய்க்காலில் கிராமமக்கள் மீன்பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் மழையின் காரணமாக கண்மாய், குளங்கள் போன்ற பகுதிகளுக்கு வயல்வெளிகள் தேங்கியுள்ள தண்ணீர் வரத்துக் கால்வாய் மூலம் நாள்தோறும் இடைவிடாது தண்ணீர் சென்று வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதியிலுள்ள வரத்து கால்வாய்களில் கிராம மக்கள் கொசுவலை மற்றும் பரி போன்ற முதலிய பொருட்களைக் கொண்டு கெண்டைமீன், அயிரை மீன் போன்ற மீன்களை பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாமல் இருந்து வந்தது. தற்போது பெய்து வரும் கனமழையால் இப்பகுதியின் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைத்ததோடு ,வரத்து கால்வாய்கள் மீன்பிடிப்பதை பெரும் மகிழ்ச்சியாக நாங்கள் கருதுகிறோம் என்று கூறி வருகின்றனர்.

Tags

Next Story