சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிராம நிர்வாக அலுவலர்

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிராம நிர்வாக அலுவலர்

திருப்புத்தூர் அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிராம நிர்வாக அலுவலர்.

திருப்புத்தூர் அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கிராம நிர்வாக அலுவலர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் விளக்கு பகுதியில் திண்டுக்கல் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைப் பணிக்கு டேங்கர் லாரி முலமாக தண்ணீர் காெண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரான்மலையில் இருந்து கோட்டையிருப்பு கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் பின்னால் சென்று கொண்டிருந்தார். அப்பாேது டேங்கர் லாரி டிரைவர் லாரியை பின்னால் இயக்கிய பாேது கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் இருசக்கர வாகனம் மீது லாரி ஏறியதில் அப்பளம் போல் நொறுங்கியது.

இதை கவனித்த கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் சுதாரித்து இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் கண்டவராயன்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story