வேகத்தடையில் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்; சிசிடிவி காட்சி பரபரப்பு

வேகத்தடையில் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்; சிசிடிவி காட்சி பரபரப்பு
X

 வேகத்தடையால் விபத்தை ஏற்படுத்தும் காட்சிகள்.

விபத்தை தடுப்பதற்காக அமைக்கப்படும் வேகத்தடைகளே விபத்திற்கு காரணமாக அமைந்த அவலம் சிவகங்கை அருகே நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஏரியூர் கிராமத்தில் விபத்தை தடுப்பதற்காக ஆங்காங்கே சாலைகளின் குறிக்கே போடப்பட்டுள்ளது. அளவிற்கு அதிகமான உயரத்தில் போடப்பட்டுள்ள வேகத்தடையால் இருசக்கர வாகன விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வேகத்தடையை மக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் அறிவிப்பு பலகை, ஒளிரும் வண்ண பெயிண்ட் பூசப்படாததே இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!