திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் வடமாடு மஞ்சுவிரட்டு: 11பேர் காயம்

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில்  வடமாடு மஞ்சுவிரட்டு:  11பேர் காயம்
X

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டு

காளைகள் முட்டியதில் காயமடைந்த 11 மாடுபிடி வீரர்கள் பொன்னமராவதிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

சிங்கம்புணரி அருகே பூலாங்குறிச்சியில் ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 11பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பூலாங்குறிச்சி,சுள்ளாம்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் 4 -ஆம் ஆண்டாக வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. வட்டமான மைதானத்தின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும். ஒவ்வொரு காளையையும் அடக்க 11 மாடுபிடி வீரர்கள் களம் இறங்க வேண்டும். மேலும், காளைகளை 25 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும்,

மாடுகளை அடக்க தவறினால், காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இன்று, நடைபெற்ற போட்டியில் மொத்தம் 16 காளைகள் பங்கேற்ற நிலையில்,176 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 10 காளைகள் பிடிமாடுகளாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் போது காளைகள் முட்டியதில் 11 மாடுபிடி வீரர்கள் காயமடைந்து பொன்னமராவதிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கண்டுகளித்தனர்.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil