மருதுபாண்டியர்களின் 221 வது நினைவு நாள் - அமைச்சர்கள் மரியாதை

மருதுபாண்டியர்களின் 221 வது நினைவு நாள் - அமைச்சர்கள் மரியாதை
X

மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ம் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அமைச்சர்கள் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகள் மற்றும் பேருந்து நிலையம் அருகிலுள்ள நினைவுத்தூண் ஆகியவைகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று (24.10.2022) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கேஆர். பெரியகருப்பன். பி.மூர்த்தி. பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் .மதுசூதன் ரெட்டி, மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் .மாங்குடி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் .செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராஜசெல்வன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியா வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!