திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

சதிருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் அமைந்துள்ள புராண வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றன .முன்னதாக மூலவர் நின்ற நாராயண பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றன தொடர்ந்து பூஜைகளுடன் தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் மண்டபத்தில் ஏராளமான பெண்கள் வரிசையாக அமர்ந்து அர்ச்சகர்கள் தலைமையில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.முன்னதாக கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கியது. தொடர்ந்து 1008 காயத்ரி மந்திரங்கள் 108 மகாலட்சுமி மந்திரங்கள் ஜெபித்து குங்குமம் மற்றும் உதிரி பூக்கள் கொண்டு திருவிளக்குக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். நிறைவாக விளக்குக்கு கற்பூர ஆரத்தி காட்டி, ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாளை வழிபட்டனர

Tags

Next Story
ai and future of education